×

மதுரை மருத்துவக் கல்லூரியில் தேர்தல் பணி: பதில் தர ஆணை!

மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் பணி வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை கோரிய வழக்கில் பதில் தர அணையிடப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கம் சார்பில் ராஜா முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு ஜன.22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

The post மதுரை மருத்துவக் கல்லூரியில் தேர்தல் பணி: பதில் தர ஆணை! appeared first on Dinakaran.

Tags : Madurai Medical College ,Madurai ,Court ,Election Commission of India ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...