×

மோடி அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 2014ல் ஒன்றியத்தில் அமைந்ததில் இருந்து அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே பாஜ ஐடி பிரிவு தேர்தல் தேதிகளை அறிந்து கொள்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அரசியலமைப்பு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டியவை. அவற்றில் செல்வாக்கு செலுத்தினால் மக்கள் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்.

2020ல் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. மாலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திய தேர்தல் ஆணையம் பின்னர் இரவில் ஏன் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் தொடங்கியது? வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மகாகத்பந்தன் வேட்பாளர்கள் தோற்று விட்டதாக கூறினர். இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

 

The post மோடி அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Modi government ,Tejashwi Yadav ,Patna ,Bihar ,Deputy Chief Minister ,RJD ,Modi ,National Democratic Alliance government ,Union ,Dinakaran ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...