×

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம்; சென்னையில் நடந்த மதிமுக நிர்வாகக்குழுவில் முடிவு

சென்னை: 2026 தேர்தலில் திமுக அணியில் தொடர்வது என்று சென்னையில் நடந்த மதிமுக நிர்வாகக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளை ஒட்டி திருச்சியில் செப்.15இல் மதிமுக மாநில மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றம். வளர்ச்சி பாதையில் தமிழகம் செல்ல, மதவாத சக்திகளை முறியடிக்க 2026இல் திமுக கூட்டணியில் தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதிமுகவின் நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடருவதாக மதிமுக அறிவித்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து மதிமுக வலியுறுத்தி வருகிறது.

அண்மையில் ஈரோட்டில் மதிமுகவின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் உள்ளிட்டோர் திமுக தலைமையை மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருந்தனர். இந்த பொதுக்குழுக் கூட்டம் முடிந்த உடனேயே, 2021-ல் பல்லடம் தொகுதியில் மதிமுகவின் வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம் உள்ளிட்டோர் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த அரசியல் சூழ்நிலையில் சென்னையில் மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த குழுவில் 2026 தேர்தலில் திமுக அணியில் தொடர்வது என்று சென்னையில் நடந்த மதிமுக நிர்வாகக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு காணொளிக்கு மதிமுக நிர்வாகக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதியை அவமதிக்கும் காணொளிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 

The post 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம்; சென்னையில் நடந்த மதிமுக நிர்வாகக்குழுவில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Dimuka Coalition ,2026 elections ,Review Executive Committee ,Chennai ,elections ,Oti Trischi ,Anna ,Tamil Nadu ,Dimuka Alliance ,Dinakaran ,
× RELATED கேரம் உலகக் கோப்பை போட்டியில்...