×

முட்டை விலை 20 காசு குறைப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த இரண்டு நாட்களாக 465 காசுகளாக இருந்த நிலையில், நேற்று என்இசிசி முட்டை விலையில் 20 காசுகள் குறைத்துள்ளது. இதையடுத்து, ஒரு முட்டையின் விலை 445 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து என்இசிசி நாமக்கல் மண்டல துணைத்தலைவர் சிங்கராஜ் கூறுகையில் அகில இந்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து மண்டலங்களிலும் இன்று (20ம்தேதி) முதல் 3 நாட்களுக்கு, விலை மாற்றமின்றி தொடரும். அடுத்த விலை அனைத்து மண்டலங்களும் கலந்து, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சனிக்கிழமை விலை அறிவிக்கப்படும் என்றார்.

The post முட்டை விலை 20 காசு குறைப்பு appeared first on Dinakaran.

Tags : NAMACKAL ,Namakkal ,NECC ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...