×

“கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி தான்” : முதல்வர் வேட்பாளர் பெயரை தவிர்த்த அமித்ஷாவுக்கு அதிமுக பதிலடி

சென்னை : முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை அமித்ஷா சொல்லாததால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, “தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார்” என பதில் அளித்தார். மேலும் பேசிய அமித்ஷா, “தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அரசு அமைவது உறுதி. தமிழ்நாட்டில் 2026ல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி அரசு அமையும்.”என்று கூறினார். ஆட்சியில் பங்கு என்ற ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். சில தினங்களுக்கு முன்பு, 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றுதான் கூறினேன், கூட்டணி அரசு என கூறவில்லை என்று எடப்பாடி கூறியிருந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி கருத்துக்கு மாறாக கூட்டணி ஆட்சியில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என்று அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதே நேரம், தேஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்று அமித் ஷா கூறவில்லை. எடப்பாடி பெயரை அமித் ஷா குறிப்பிடாததால் வேறு யாரேனும் முன்னிறுத்த திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆட்சியில் பங்கு என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ள நிலையில் அதிமுக அதனை ஏற்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா தவிர்த்த நிலையில் ராஜேந்திர பாலாஜி,”அமித்ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் தே.ஜ.கூட்டணியின் தலைவர் எடப்பாடிதான்; அவர் சொல்வதே இறுதி முடிவு. கூட்டணி குறித்த எந்த முடிவு என்றாலும் அது எடப்பாடி பழனிசாமிதான் அறிவிக்க வேண்டும். தே.ஜ. கூட்டணியின் “கட்டளை தளபதி” எடப்பாடி பழனிசாமிதான்” இவ்வாறு கூறியுள்ளார்.

The post “கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி தான்” : முதல்வர் வேட்பாளர் பெயரை தவிர்த்த அமித்ஷாவுக்கு அதிமுக பதிலடி appeared first on Dinakaran.

Tags : ALLIANCE ,EDAPPADI ,AMITSHAW ,Chennai ,Amitsha ,Edapadi Palanisami ,chief minister ,National Democratic Alliance ,Akkatsi ,Edapadi ,Amitshah ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி...