×

தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அரசு அமல்படுத்த வேண்டும்: ஏ.சி.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அரசு அமல்படுத்த வேண்டும் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் அனைத்துலக முதலியார் வேளாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நமது நிலைப்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்க கூட்டம் நடந்தது.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார். இதில், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாட்டின் நீண்ட வருட கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்தல், பொருளாதார நிலைப்பட்டியலில் உள்ளவருக்கு மட்டுமே முன்னுரிமை, 1985ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட பிரிவினர் அனைவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்ந்துக்கொள்ள வேண்டும்,
பீகார், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் போல் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்காய்வு நடத்த வேண்டும், தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அரசு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அரசு அமல்படுத்த வேண்டும்: ஏ.சி.சண்முகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government ,Tamil Nadu ,Chennai ,New Justice Party ,A. C. Shanmugham ,Jatiwari ,International Federation of Etc. Employees ,Kamarajar Arena ,Tenampetta, Chennai ,A. C. Sanmugham ,Dinakaran ,
× RELATED டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்