×

நல்லா தண்ணி குடிங்க.. மதியம் 12ல இருந்து 3 மணி வரைக்கும் வெளில தல காட்டாதீங்க: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து வழிக்காட்டு நெறிமுறைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலையில் இருந்து 20 முதல் 30 வரை செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாகவும், உயர்ந்தபட்சமாக வேலூரில் 41.50 செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை, கரூர், பரமத்தி பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட 20 முதல் 30 வரை செல்சியஸ் அதிகரித்து 40 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் இயல்பு வெப்பநிலையில் இருந்து 20 முதல் 30 வரை செல்சியஸ் கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோடைகால கடுமையான
வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை:
* உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.
* அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.
* ஓ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
* இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.
* நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.
* மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.
* வெளியில் செல்லும் போது காலணிகளை அணிவதுடன் குடையினையும் கொண்டு செல்லவும்.
* உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

செய்யக்கூடாதவை:
* வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.
* சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நல்லா தண்ணி குடிங்க.. மதியம் 12ல இருந்து 3 மணி வரைக்கும் வெளில தல காட்டாதீங்க: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Revenue ,Disaster Management Department ,Chennai ,Tamil Nadu ,Department of Revenue and Disaster Management ,Dinakaran ,
× RELATED கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு