×

வீட்டு வேலைக்கு சென்றபோது லாரி மோதி பெண் பலி

வேளச்சேரி: கோவிலம்பாக்கம், கலைஞர் சாலையை சேர்ந்தவர் தனபாக்கியம் (45). இவர், வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல், வேலைக்கு செல்வதற்காக வடக்குபட்டு மெயின் ரோடு, மேடவாக்கம் மெயின்ரோடு சந்திப்பில் சாலையை கடந்தார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, பாக்கியம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பினார். தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பாக்கியம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் லாரி இன்னும் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post வீட்டு வேலைக்கு சென்றபோது லாரி மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Thanapakhyam ,Kovilambakkam, Kalainar Road ,Medavakkam Main Road ,North Main Road ,
× RELATED திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார்...