×

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கொளத்தூரில் நடந்த கால்பந்தாட்ட போட்டிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். திமுக பவள விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொளத்தூர், பல்லவன் சாலையில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்டத்திலிருந்து 32 கால்பந்தாட்ட அணிகள் போட்டியில் பங்கு பெற்றன.

இதில் 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரேநாளில் 13 போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அணிக்கு சுழல் கோப்பை, ரூ.25 ஆயிரம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூ.15 ஆயிரம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ ரங்கநாதன், பகுதிச் செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டலக்குழு தலைவர் சரிதா, செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : DMK coral festival ,Chennai ,Chennai East District ,DMK ,Kolathur ,
× RELATED கேரளா, ஆந்திரா, வட மாநிலங்களை விட...