×

ஜூலை 1ம் தேதி முதல் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கையை ஜூலை 1-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணி எழுச்சியொடு தொடங்க உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கையை துவங்க இருக்கிறோம். திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பேரணியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு சாவடி முகவர்கள், ஐ.டி. விங் மற்றும் இன்னும் பிற அணிகள் சேர்ந்து திமுக உறுப்பினர்களை சேர்க்க உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் சென்று உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

The post ஜூலை 1ம் தேதி முதல் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : TIMUKA ,MINISTER GOLD ,SOUTH INDIA ,Chennai ,Chief Minister ,Shri Thimuq ,K. Minister ,Gold South ,Rasu ,Stalin ,Dimuka ,Minister ,Gold South India ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்