×

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். இதையடுத்து, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே செல்வது வழக்கம். இதற்கென பண்டிகை நாட்களில் தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், ரயில், பஸ்களில் கூட்டம் அலைமோதும். ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை( 12ம் தேதி) ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வரும் 12ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ம் தேதியும், 13ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10ம் தேதியும், 14ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11ம் தேதியும் பயணம் செய்ய முடியும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும்படி ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,CHENNAI ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு பயணத்தில் இருந்து...