×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9-ம் தேதி முதல் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டம்

சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக தற்போது சென்னை தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைகாக எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கபட வேண்டும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்துகளை இயக்குவது, பண்டிகை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்துகளை இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி இயக்கபடும் சிறப்பு பேருந்துகள் சென்னையை பொறுத்த வரையில், சென்னை கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கபடும்.

இந்த ஆண்டும் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க திட்டமிடபட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தினசரி சென்னையில் இருந்து மற்றும் மற்ற மாவட்டகளில் இருந்து இயக்கபடும் வழக்கமான பேருந்துகளை தவிர்த்து, தமிழகம் முழுவதும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்காக திட்டம் வகுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து 13-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9-ம் தேதி முதல் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Diwali festival ,Chennai ,Diwali ,
× RELATED “இன்னும் ஓரிரு நாளில் நம் கூட்டணியில்...