×
Saravana Stores

விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் கணவரிடம் இருந்து மனைவி நிவாரணம் கோரலாம்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் கணவரிடம் இருந்து மனைவி நிவாரணம் கோரலாம் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவி துன்புறுத்தியதாக விவாகரத்து கோரி கணவர் தாக்கல் செய்த வழக்கை, வேலூர் குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், பொய்யான தகவல்களை கூறி விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ததற்காக இழப்பீடு வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இழப்பீடு கோரிய மனுவை வேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் நிவாரணம் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ், குடும்ப நல நீதிமன்றமும், உரிமையியல் நீதிமன்றமும் நிவாரணம் வழங்குவதற்கு உத்தரவிட சட்டத்தில் இடம் உள்ளது. அதன்படி கீழமை நீதிமன்றம், மனைவிக்கான இழப்பீட்டை நிர்ணயிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

The post விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் கணவரிடம் இருந்து மனைவி நிவாரணம் கோரலாம்: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,Vellore Family Welfare Court ,Dinakaran ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி