×
Saravana Stores

விவாகரத்து கோரிய வழக்கு உமர் அப்துல்லா, மனைவி பாயல் ஆஜராக வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்முவில் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா பிரிந்து சென்ற தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உமர் அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பாக பாயல் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி பாயல் ஆகியோர் சமரசம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக சமரச மையத்தில் நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் சமரச மையம் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் நவம்பர் 4ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post விவாகரத்து கோரிய வழக்கு உமர் அப்துல்லா, மனைவி பாயல் ஆஜராக வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Umar Abdullah ,Payal ,Supreme Court ,New Delhi ,Former ,Jammu Chief Minister ,National Conference Party ,Omar Abdullah ,High Court ,Delhi High Court ,Dinakaran ,
× RELATED ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து...