×

சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்று திறனாளிகள் சங்கம் நன்றி

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கிட வரலாற்றுச் சிற்பமிக்க ஆணையை வெளியிட்டதுடன், திமுகவில் மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு திட்டங்கள் அறிவித்தமைக்காக மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்று ஏற்புரை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்க அனைத்து மாவட்டத்திலும் திரளாக வருகை தந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினருக்கும், மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் அனைத்து சங்க பிரதிநிதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்று திறனாளிகள் சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Tags : Disabled Persons' Association ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Disabled Persons' Association ,State ,President ,Re. Thangam ,Disabled Persons' Coordination Committee ,DMK… ,The Disabled Persons' Association ,Dinakaran ,
× RELATED அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி...