×

திண்டுக்கல் அருகே போன்சாய் முறையில் மரங்கள் வளர்ப்பு; அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே போன்சாய் முறையில் பல்வேறு வகை மரங்களை அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் வளர்த்து பலரையும் வியக்க வைத்து வருகிறார். பொதுவாக மரங்களை இயற்கையாக வளர விடாமல் கத்தரித்தும், அவற்றின் தண்டுகளை கம்பிகளை சுற்றியும் கட்டுப்படுத்துவதன் மூலம் பார்வைக்கு அழகாக தொட்டிகளில் வளர்க்கும் முறை போன்சாய் எனப்படுகிறது. ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் மரம் வளர்க்க ஆசைப்படுவோர் போன்சாய் முறையில் வீடுகள், அலுவலகங்களில் மரங்கள் வளர்ப்பது மிகவும் பிரபலம்.

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற மரங்களை வளர்க்க பொதுமக்கள் மத்தியில் அதிகளவில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. திண்டுக்கல் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீராமபுரம் சங்கரலிங்கம் கிராமத்தை சேர்ந்த லியோ என்பவரும் போன்சாய் முறையில் மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியரான லியோ, நாள் ஒன்றுக்கு அரைமணி நேரம் செலவிட்டாலே போன்சாய் கல்ச்சர் முறையில் மரங்களை நல்ல முறையில் வளர்க்கலாம் என்கிறார்.

The post திண்டுக்கல் அருகே போன்சாய் முறையில் மரங்கள் வளர்ப்பு; அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dinakaran ,
× RELATED திருப்பதி லட்டு விவகாரத்தில்...