டெல்லி : தனியார் விமான நிறுவனங்கள், பயணக் கட்டணங்களை திடீர் திடீரென உயர்த்துவதாக மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி புகார் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “அண்மையில் சென்னையிலிருந்து டெல்லி செல்ல டாடா குழுமத்தின் Vistara விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். முதலில் ரூ.33,000 செலுத்த முயன்றபோது Error என்ற குறிப்பு வந்தது, அடுத்த நொடியே Error சரியாக, ரூ. 93,000-ஆக உயர்த்திக் காட்டியது. அதே போல், சில வேளைகளில் ரூ.33,000 என்று முதலில் கணினி காட்டும் கட்டணம் திடீரென்று ரூ.78,000-ஆக உயர்த்தப்படுகிறது.
டாடா குழும நிறுவனமான விஸ்தாராவில் டி.சி.எஸ். மென்பொருளே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு பயன்படுத்தப்படுகிறது.விமானப் பயணக் கட்டண பிரச்சனைகளை பயணிகள் விமானங்கள் ஒழுங்காற்று அமைப்பு தீர்ப்பதில்லை. பயணிகள் விமானத்துறையில் ஏகபோகமாக உள்ள டாடா குழுமம் கட்டணங்களை திடீரென உயர்த்துவதை முறைப்படுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.மக்களவையில் தயாநிதி மாறன் கேள்விக்கு பதில் அளித்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமானப் பயணக் கட்டண திடீர் உயர்வு குறித்து டிஜிசிஏ-வில் உள்ள டிக்கெட் கட்டண கண்காணிப்பு பிரிவு மூலம் கண்காணிப்பதாக உறுதி அளித்தார்.
The post தனியார் விமான நிறுவனங்கள், பயணக் கட்டணங்களை திடீர் திடீரென உயர்த்துவதாக மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி புகார்!! appeared first on Dinakaran.