×

காஞ்சிபுரத்தில் நாளை மறுநாள் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுதினம் முதல் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, வரும் 17ம்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 3,33,481 குழந்தைகள், மாணவர்கள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 76,313 பெண்களுக்கு அல்பென்டசோல் என்ற மாத்திரை வழங்கப்பட உள்ளது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகிய அனைத்து இடங்களில் உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதார துறை, குழந்தை வளர்ச்சித்துறை, சமூக வளர்ச்சி துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகிய பணியாளர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதில் விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 24.8.2023 அன்று வழங்கப்பட உள்ளது.

அதன்படி, குடற்புழு நீக்க மாத்திரையை 1 முதல் 2 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு, தலா 1/2 (200mg) மாத்திரை மற்றும் 2 முதல் 30 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு தலா 1 (400mg) மாத்திரை வழங்கப்படும். இதன்மூலம் ஒட்டு மொத்த குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள் ஆரோக்கியத்தை பேணிக்காக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் நாளை மறுநாள் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...