×

டிமாண்ட் வைக்கிறோம் என்பது தவறான சித்தரிப்பு: துரை வைகோ பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை வைகோ நேற்று அளித்த பேட்டி: காவல் நிலையத்தில் அஜித்குமார் இறந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை எங்களுடைய இயக்கம் குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. இது குறித்த இறுதி முடிவை கூட்டணியுடன் பேசி, கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும். அதே சமயம் நாங்கள் இத்தனை சீட் எதிர்பார்க்கிறோம். டிமாண்டாக வைக்கிறோம் என்ற தவறான சித்தரிப்பு இருக்கிறது. அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post டிமாண்ட் வைக்கிறோம் என்பது தவறான சித்தரிப்பு: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Coimbatore ,MDMK ,Deputy General Secretary ,Coimbatore airport ,Ajith Kumar ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED பாஜ தேசிய செயல் தலைவராக பீகார்...