×

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். குறுவை பயிர் சேத ஆய்வு மற்றும் நிவாரணம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ. பெரியசாமி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியிருந்தனர். விவசாயிகள் கூறியிருந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், குறுவை பயிர் சேத ஆய்வு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Delta districts ,Chennai ,M.K.Stalin ,
× RELATED பனப்பாக்கத்தில் நாளை தொழிற்பூங்கா...