×

ஜி-20 மாநாடு டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் விடுமுறை

புதுடெல்லி: டெல்லியில் அடுத்த மாதம் 9 ம் தேதி மற்றும் 10ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி அடுத்த மாதம் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக பெரிய அளவில் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளதால், அதனால் ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8,9,10 ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

The post ஜி-20 மாநாடு டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : G-20 Summit ,Delhi ,Union Government ,New Delhi ,G-20 ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...