×

டெல்லி- மும்பை விமானத்தில் வெடி குண்டு புரளி

புதுடெல்லி: டெல்லியில் இருந்து மும்பை செல்வதற்காக நேற்று முன்தினம் விஸ்தாரா விமானம் இந்திரகாந்தி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தது. அப்போது ஆண் பயணி ஒருவர் போனில் தனது பையில் இருந்த வெடிகுண்டை சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்ட சக பயணி அங்கிருந்த விமான ஊழியரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. இதனால் 4.55 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது.

The post டெல்லி- மும்பை விமானத்தில் வெடி குண்டு புரளி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Mumbai ,New Delhi ,Vistara ,Indira Gandhi airport ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி