- விவசாயிகளின் டெல்லி ஜலோ பேரணி
- பஞ்சாப்-ஹரியானா எல்லை
- சண்டிகர்
- ஷம்பு
- டெல்லி ஜலோ பேரணி
- யூனியன் அரசு
- பஞ்சாப்
- ஹரியானா
- உத்திரப்பிரதேசம்
- தின மலர்
சண்டிகர்: பஞ்சாப்-ஹரியானா எல்லை ஷம்புவில் இருந்து பேரணியாக சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லி ஜலோ பேரணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பலமாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் – ஹரியானா இடையே உள்ள ஷம்பு எல்லையில் அவர்கள் சாலை தடுப்புகளை மீறி செல்ல முயன்றபோது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டனர். விவசாயிகள் சிதறி ஓடியதால் அப்பகுதியே போர்களம் போல காட்சியளித்தது. போராட்டம் நடைபெறும் இடத்தில் காவல்துறை 144 தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவுவதை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல் சட்டை அணியாமல் கையில் மண்டை ஓடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 2மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
The post விவசாயிகளின் டெல்லி ஜலோ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பதற்றம் நிலவுவதால் தீவிரமாக கண்காணிக்கப்படும் சமூக வலைதளங்கள்!! appeared first on Dinakaran.