×

தேர்தல் தோல்வி பயத்தால் சிலிண்டர் விலை குறைப்பு: மோடி மீது புதுவை மாஜி முதல்வர் தாக்கு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநில தேர்தலின் போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.500 காஸ் மானியம் வழங்கப்படும் என உள்ளிட்ட 5 அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டு வங்கிக்காக அறிவித்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை வீணடிக்கும் என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

தற்போது 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக மோடி, சிலிண்டர் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். 5 மாநில தேர்தல் தோல்வி பயத்தினால் சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் மோடியின் வேஷம் கலைந்துள்ளது. தணிக்கை அறிக்கையில், மத்திய அரசின் 7 திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டு்ள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் தோல்வி பயத்தால் சிலிண்டர் விலை குறைப்பு: மோடி மீது புதுவை மாஜி முதல்வர் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Former ,Puducherry ,chief minister ,Modi ,Narayanasamy ,Karnataka ,
× RELATED புதுச்சேரி அமைச்சர் மகளுக்கு...