×

கடலூர் மாவட்டம் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்: நெய்வேலி என்எல்சியில் சுரங்க விரிவாக்க பணியின்போது, மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல்(45) என்பவர் உயிரிழந்தார். நெய்வேலி NLC சுரங்கத்திற்குள் இரவு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி குழந்தைவேல் மீது கனரக வாகனம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மண் வெட்டும் இயந்திரத்திற்கு சிக்னல் கொடுத்து கொண்டிருந்த போது உடல் மீது வாகனம் ஏறியது. வாகனம் ஏறியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இரவு நேரத்தில் யாரும் பார்க்காத நிலையில் காலையில் உடல் நசுங்கிய நிலையில் கண்டெடுத்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி உற்பத்தி, மின்சார உற்பத்தி என என்எல்சி தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது நெய்வேலி என்எல்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வரும் நிலையில், இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70 சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நெய்வேலி என்எல்சி யில் முதல் சுரங்கத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் இரண்டாவது சுரங்கத்தில் நிலக்கரி எடுப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு எதற்காக நிலம் எடுக்கும் பணிகளை என்எல்சி நிறுவனம் துவங்கியது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்த சுரங்க விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி குழந்தைவேல் டாப் பெஞ்ச் பிரிவில் மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த நெய்வேலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூர் மாவட்டம் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,NLC ,Cuddalore ,Neyveli NLC ,Chiddavel ,Moolakuppam ,Neyveli NLC Mine ,
× RELATED சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில்...