×

முறைகேடு புகார் எதிரொலி.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கு சரிந்த அதானி குழுமம்..!!

மும்பை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.1,03,957 கோடி சரிந்துள்ளது. அதானி நிறுவனம் ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுத்து சூரிய சக்தி மின்சாரப் பணிக்கான ஒப்பந்தங்களை பெற்றதாக அமெரிக்க பங்குகள் பரிவர்த்தனை ஆணையம் குற்றம்சாட்டியதுடன் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்கும் தொடர்ந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் அவருக்கு எதிராக எழும்பியுள்ள புகார் இந்திய அரசியலிலும் விவாதப்பொருளாகியுள்ளது.

இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.1,03,957 கோடி சரிந்துள்ளது. கவுதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதை அடுத்து அதானி குழும நிறுவன பங்குகள் 23% வரை விலை சரிந்தன. ஒட்டுமொத்தமாக அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு ரூ.2.30 லட்சம் கோடி சரிந்துள்ளது. ரூ.2.60 லட்சம் கோடியாக இருந்த அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவு பிற்பகலில் ரூ.30,000 கோடி மீண்டது. கவுதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.5,89,937 கோடியில் இருந்து ஒரேநாளில் ரூ.4,85,980 கோடியாக சரிந்துள்ளது. ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 25-வது இடத்தில் இருந்து கவுதம் அதானி 22-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

The post முறைகேடு புகார் எதிரொலி.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கு சரிந்த அதானி குழுமம்..!! appeared first on Dinakaran.

Tags : Adani Group ,MUMBAI ,Gautam Adani ,US Securities and Exchange Commission ,Adani ,Dinakaran ,
× RELATED அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர்...