×

கொரோனா பாதிப்பு குறைகிறது

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணி வரை வௌியிட்ட நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,633 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லியில் 4, கர்நாடகா, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர், கேரளாவில் விடுபட்ட 4 இறப்புகளையும் சேர்த்து11 பேர் பலியானதால், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. தற்போது 61,233 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கொரோனா பாதிப்பு குறைகிறது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி