×

வண்ணங்களும் எண்ணங்களும்

உலகில் எங்கு சென்றாலும் வண்ணங்கள் உண்டு. வண்ணங்கள் பற்றிய ஞானம் நமக்கு அதிகமாக ஏற்படுவதில்லை. வண்ணத்தை பற்றிய நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களை அறிந்து கொள்வோமாக…

மஞ்சள் வண்ணம்

மஞ்சள் வண்ணத்தின் அதிதேவதை – பிரம்மா. படைப்புத் திறனுக்கு அதிபதியாக விளங்குபவர்.

நேர்மறை ஆற்றல் – மஞ்சள் வண்ணம் மங்களத்தையும், சுபநிகழ்வுகளையும் ஏற்படச் செய்யும். எதையும் பெருக்கும் திறன் அதிகம். உயர்ந்த பதவிகளையும் கௌரவத்தையும் தரும். சந்தோஷத்தை தரும். எப்பொழுதும் ஒரு விழிப்பு நிலையைத்தரும்.

எதிர்மறை ஆற்றல் – இந்த வண்ணம் அதிகமாக பயன்படுத்துவதால், கொழுப்பு உடலில் தேங்கும் வாய்ப்புகள் அதிகம். அதாவது, கொலஸ்ட்ரால். கபடம் எண்ணங்கள் உண்டாகும். தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை அவமதிக்கும் பண்பு உருவாகும். கோழைத்தனம் இருக்கும்.

இந்த வண்ணம் அதிகம் புழங்கும் இடம் – மாலையில் வெயில் கதிர்கள் தொடும் அனைத்து இடங்களும், நகைகள் வியாபாரம் செய்யப்படும் இடம், மஞ்சள் வண்ண மின்விளக்குகள் பயன்படுத்தும் இடம்.

இளஞ்சிவப்பு வண்ணம்

இளஞ்சிவப்பு வண்ணத்தின் அதி தேவதை – பெண் தெய்வங்கள் அனைத்தும் இந்த இளஞ்சிவப்பு நிறத்தை குறிக்கிறது.

நேர்மறை ஆற்றல் – புத்துணர்ச்சியான மனம் இருக்கும். இளஞ்சிவப்பு நிறம் அன்பை, காதலை வெளிப்படுத்தக்கூடிய நிறமாக உள்ளது. இளைஞர்களை அதிகம் கவரக்கூடிய நிறமாக உள்ளது. குழந்தைகள் தன் தாயிடம் உள்ள அன்பை உணரக்கூடிய ஆற்றல் கொண்ட நிறம். மழை தேவனுக்கு பிடித்த நிறமாக உள்ளது. இளமை பதின்ம வயதில் வெளிப்படும் நிறமாக உள்ளது.

எதிர்மறை ஆற்றல் – இந்த வண்ணத்தை அதிகம் பயன்படுத்துவதால், எல்லா கட்டுப்பாடுகளையும் நிராகரிக்கும் எண்ணம். கட்டுப்பாடுகளை கடந்து தன் மனம் எதை விரும்புகின்றதோ அதனை நோக்கி செல்லும் எண்ணத்தை தோற்றுவிக்கும். அதீத காம உணர்வுகளை ஏற்படுத்தும். உடலில் ஆற்றல்கள் எளிதாக குறையும் வழிகளை ஏற்படுத்தும்.

இந்த வண்ணம் அதிகம் புழங்கும் இடம் – தாமரை மற்றும் ரோஜா பூக்கள் அதிகம் மலரும் இடம்.

ஆரஞ்சு வண்ணம்

ஆரஞ்சு வண்ணத்தின் அதிதேவதை – சிவன், நடராஜர். எப்பொழுதும் உலக இயக்கத்தின் மூலமாக இருப்பவர். எல்லாவற்றையும் ஆதிக்கம் செய்பவர்.

நேர்மறை ஆற்றல் – இலக்கை நோக்கி பயணிக்கும் ஆற்றலை உற்பத்தி செய்யும். அதாவது மனம், செயல் ஆகியவற்றால் இலக்கு உறுதியாக இருக்கும். புதுமையான செயல்பாடுகளையும், புதுமையான சிந்தனைகளையும் பாராட்டும் குணம் இவர்களுக்கு உண்டு. மனதில் உற்சாகத்தை உண்டாக்கச் செய்யும்.

எதிர்மறை ஆற்றல் – இந்த வண்ணம் அதிகமாக பயன்படுத்துவதால் கர்வத்தை உண்டாக்கும். எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தால் புதிய விஷயங்கள் அறியாமல் இருப்பர். ஆன்மிக எண்ணங்கள் குறையும். தவறுகளை மறைக்கும் குணம் உண்டாக்கும். உடலில் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்த வண்ணம் அதிகம் புழங்கும் இடம் – காலை சூரிய உதயத்திலும், மாலை சூரிய அஸ்தமனத்திலும் இந்த வண்ணத்தை இயற்கையாகவே நாம் பெறலாம்.

தொகுப்பு: சிவகணேசன்

The post வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பாண்டுரங்கன் வருகை