×

கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் த்ரிஷா (19). இவர் திருக்கோவிலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கல்லூரியில் மதிய உணவு இடைவேளையின்போது கல்லூரி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து த்ரிஷா தற்கொலை செய்துள்ளார். மாணவி தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்னையா, காதல் விவகாரமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட எஸ்பி சரவணனும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

The post கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Trisha ,Palankur ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...