×

திருத்துறைப்பூண்டி பழைய தாசில்தார் குடியிருப்பில் புதர் மண்டிய அவலம்-இடித்து அகற்றி புதிதாக கட்ட கோரிக்கை

*மக்களின் குரல்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டியில் புதர் மண்டி கிடக்கும் பழைய தாசில்தார் குடியிருப்பை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி தாசில்தார் குடியிருப்பு கட்டி சுமார் 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்து பல ஆண்டுகள் அப்படியே கிடக்கிறது.

தற்போது இந்த குடியிருப்பு மிகவும் சேதமடைந்து செடி, கொடிகள் புதர் போல் மண்டி கிடக்கிறது. தாலுகா குடியிருப்பு அருகில் எதிரில் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு மற்றும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் அருகில் டிஎஸ்பி அலுவலகம் உள்ளது. குடியிருப்பை சுற்றி வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் மண்டி கிடக்கும் செடி, கொடிகளால் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் பணியாற்ற வரும் தாசில்தார்கள் கடந்த பல ஆண்டாக வாடகை குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர்.எனவே சேதமடைந்த பழைய தாசில்தார் குடியிருப்பை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய குடியிருப்பு கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tashildar ,Thiruthuraipoondi , Thiruthuraipoondi: Demand for demolition and construction of a new dasildar residence at Thiruthuraipoondi
× RELATED திருத்துறைப்பூண்டியில் ஆசிரியர் தின சிறப்பு கூட்டம்