×

கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்

சென்னை: கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்டுள்ளது.

டி.ஐ.ஜி. விஜயகுமார் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழக காவல்துறையில், கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு மாண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

படித்துப் பட்டம் பெற்று, காவல்துறையில் உயர் பதவிக்கு வந்த விஜயகுமார் அவர்கள் எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பதை யூகிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.

The post கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Cargo ,Vijayakumar ,Madhyamik General Secretary ,Vaiko ,CHENNAI ,Coimbatore ,Dinakaran ,
× RELATED உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து