×

தூய்மை Missionல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: விரைவில் தொடங்கப்படவுள்ள தூய்மை Mission-இல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நம் எதிர்கால சந்ததிக்கு தூய்மையான சுற்றுச்சூழலை அளித்திட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மை Mission திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்கள். ‘தூய்மை Mission’ என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு. சுகாதாரமான உலகத்தை அமைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய வாழ்வியல் அங்கம்!நம்முடைய உலகம் என்றும் நமக்கானதாக இருக்க, மக்கும் குப்பை – மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்sகுவோம். ‘தூய்மை மிஷன்’ தன் இலக்கை நோக்கி வெல்லட்டும்! இவ்வாறு தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது! யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது. விரைவில் தொடங்கப்படவுள்ள தூய்மை Missionல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்! இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 

The post தூய்மை Missionல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Deputy ,Chief Minister Assistant Secretary ,Stalin ,Chief Minister MLA ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...