×

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. அதிக தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!!

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும். அத்துடன் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

*தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 9,14,320
* மாணவியர்களின் எண்ணிக்கை :4,55,017
* மாணவர்களின் எண்ணிக்கை: 4,59,303

தேர்ச்சி விவரங்கள்

*தேர்ச்சி பெற்றவர்கள்:8,35,614 (91.39%)
*மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சிபெற்றுள்ளனர்,
*கடந்த மே-2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணாக்கர்கள் 9,12,620. தேர்ச்சி பெற்றோர்8,21,994. தேர்ச்சி சதவிகிதம் 90.07%.

பாடவாரியான தேர்ச்சி விவரம்

கூடுதல் விவரங்கள்

*பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,638 இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,502 உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,136.
*100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை: 3,718
*100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை: 1,026

பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை

*தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 10,808.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 9,703 (89.77%).

*தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 264.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 112 (42.42%).

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

பெரம்பலூர் : 97.67%
சிவகங்கை : 97.53%
விருதுநகர் : 96.22%
கன்னியாகுமரி : 95.99%
தூத்துக்குடி : 95.58%

 

The post தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. அதிக தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Perambalur District ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு...