×

நம்பர் 1 சின்னர் சுற்று 2க்கு தகுதி: பிரான்ஸ் வீரரை வீழ்த்தினார்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர் அபார வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், பிரான்சை சேர்ந்த ஆர்தர் ரின்டர்நெச் மோதினர்.

எவ்வித பதற்றமும் இல்லாமல் துடிப்புடன் ஆடிய சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ, செர்பிய வீரர் துஸன் லஜோவிக் மோதினர். இப்போட்டியில் அபாரமாக ஆடிய ஷெவ்சென்கோ, 6-2, 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

The post நம்பர் 1 சின்னர் சுற்று 2க்கு தகுதி: பிரான்ஸ் வீரரை வீழ்த்தினார் appeared first on Dinakaran.

Tags : seed Cinner ,Paris ,French Open ,Janik Cinner ,French ,Paris… ,Cinner ,Dinakaran ,
× RELATED மும்பையில் இன்று பேஷன்ஷோவில்...