*368 மனுக்கள் பெறப்பட்டது
சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மனு நீதிநாள் முகாமில் 368 மனுக்கள் பெறப்பட்டது.சித்தூர் மாவட்டத்தில் வாரந்தோறும் சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட் கிழமை அன்று மனுநீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளிக்க வருகின்றனர். அனு அளிப்பதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதனால் மூதாட்டிகள் பலர் அவதிபட்டு வந்தனர். சிலருக்கு மயக்கமும் ஏற்படுகிறது.
எனவே இதுபோன்ற இன்னல்களை தடுக்க நேற்று சித்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் மக்கள் வெயிலில் சிரமப்படாமல் இருக்க மேற்கூரை மற்றும் நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் நிற்பதை தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகளும் போடப்பட்டது. பொதுமக்களுக்காக தற்போது கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
நேற்று சித்தூர் மாவட்ட டிஆர்ஓ ராஜசேகர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதினால் முகாமில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து 368 பேர் தங்கள் குறைகளை மனுவாக எழுதி டிஆர்ஓவிடம் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டும், ரேஷன் கார்டு வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதினால் முகாமில் டிஆர்ஓராஜசேகரிடம் வழங்கினார்கள்.
மனுவை பெற்றுக் கொண்ட டிஆர்ஓ பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார். இதில் ஆர்டிஓ புள்ளையா மற்றும் ஏராளமான பல்வேறு துறையை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கிய புகார்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் பல்வேறு துறையை சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.