×

சில்லிபாயிண்ட்…

* உலக கோப்பை இன்று துவக்கம்
அமெரிக்காவில் ஃபிபா கிளப் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்திய நேரப்படி இன்று காலை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள அல் அஹ்லி எப்சி (எகிப்து )- இன்டர் மயாமி சிஎப் (அமெரிக்கா) அணிகள் மோதுகின்றன. மயாமி அணிக்காக நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி(அர்ஜென்டினா) களம் இறங்க உள்ளார்.

* நாடு திரும்பிய கவுதம் கம்பீர்
இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இந்திய அணி சென்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடந்த 11ம் தேதி திடீரென இந்தியாவுக்கு புறப்பட்டார். கம்பீரின் தாய்க்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் நாடு திரும்பியதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து திரும்பி, அணியுடன் கம்பீர் இணைவார் என்று தெரிகிறது.

* ஷ்ரேயாஸ் அணி மோசமான தோல்வி
தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் நடப்பது போல் மும்பையில் ‘டி20 மும்பை லீக்’ நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் மும்பை ஃபால்கன்ஸ் – மராத்தா ராயல்ஸ் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னறின. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ஃபால்கன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சித்தேஷ் லாட் தலைமையிலான ராயல்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Chillipoint ,World Cup ,FIFA Club World Cup ,USA ,Al Ahli FC ,Egypt ,Inter Miami CF ,Dinakaran ,
× RELATED மும்பையில் இன்று பேஷன்ஷோவில்...