×

தமிழகத்தில் காங்கிரசுக்கான தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை: பட்டியலில் 3 தொகுதிகள் மாறுகிறதா?; வேட்பாளர் தேர்வு தீவிரம்

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளுக்கான பட்டியலில் 3 தொகுதிகளில் மட்டுமே மாற்றம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் ஒரு சில மட்டும் மாற்றப்படுகின்றன. எனவே அதுதொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை விரைவாக முடிவு செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் இறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறையும், கரூருக்கு பதிலாக ஈரோடும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரம், தேனியா அல்லது திருநெல்வேலியா என்ற ஒரு பேச்சுவார்த்தையும் செல்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே போட்டியிட்ட மற்ற 6 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வழங்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழகத்தில் காங்கிரசுக்கான தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை: பட்டியலில் 3 தொகுதிகள் மாறுகிறதா?; வேட்பாளர் தேர்வு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Salin ,CHENNAI ,Congress party ,DMK ,Selvaperunthakai ,M.K.Stalin ,
× RELATED முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின்...