×

நிதிப்பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதன் மூலம் நிதிநிலை மேம்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை : நிதிப்பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதன் மூலம் நிதிநிலை மேம்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பொறுப்பான, திறன்மிக்க நிதி மேலாண்மையால் தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சீர்செய்து வரும் திராவிட மாடல் அரசின் புதுமுயற்சியாக, சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன.இதனால் கடனுக்கான வட்டி செலுத்துவது குறைந்து, மழைநீர் வடிகால் உள்ளிட்ட இன்றியமையாத உட்கட்டமைப்புப் பணிகளுக்கான நிதி திரட்டப்படும்! மாநகராட்சியின் நிதிநிலை மேம்படும்!”இவ்வாறு தெரிவித்தார்.

The post நிதிப்பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதன் மூலம் நிதிநிலை மேம்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Dravitha Model Government ,Tamil Nadu ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும்...