×

‘வியக்கத்தக்க கத்திப்பாரா மெட்ரோ மேம்பாலப் பணிகள்’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “இன்ஜினீயரிங் மார்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் கத்திப்பாரா மேம்பாலம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கிண்டி கத்திப்பாரா பகுதியில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தார் மறைந்த முதல்வர் கலைஞர். அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன். Engineering Marvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்,” என்று கூறியுள்ளார்.

The post ‘வியக்கத்தக்க கத்திப்பாரா மெட்ரோ மேம்பாலப் பணிகள்’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Principal ,K. Stalin ,Chennai ,Kattapara ,Engineering Marvel ,Chief Minister ,M. K. Stalin ,Chief Minister of ,Tamil Nadu ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED 2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய...