×

“இந்தியாவில் உள்ள 16 லட்சம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில், 6 லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை : சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜூன் 23 வரை நடைபெறும் 16வது கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கண்காட்சி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 435 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு 468 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது.14 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளோம்;இன்னும் உருவாக்கவுள்ளோம். மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3ம் இடம் பிடித்துள்ளது. ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 11.9%ஆக உள்ளது. இந்தியாவில் உள்ள 14.90 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 6.30 லட்சம் பேர் பெண்கள். நாட்டில் உள்ள மொத்த பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 41% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழ்நாட்டில் தொழில் முனைவோரில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு.

2021ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. தொழில் வளர்ச்சி, தொழில் துறை, தொழிலாளர் நலனின் தேவையை கவனித்து செயல்படுகிறோம்.சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் 9,915 தொழில்முனைவோருக்கு ரூ.2,031 கோடி மானியத்துடன் ரூ.5,200 கோடி கடன் வழங்கியுள்ளோம். வேளாண்மைக்கு அடுத்த நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 42,278 பேருக்கு ரூ.7,538 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post “இந்தியாவில் உள்ள 16 லட்சம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில், 6 லட்சம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Mu K. Stalin ,Chennai ,President ,Chennai Trade ,Center ,International Machine Tools Exhibition ,K. Stalin ,Ambattur Industry Manufacturers Association ,Chief Minister ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவு