×

‘ஆடுதாம் ஆந்திரா’ போட்டிகள் தொடக்க விழா ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன்

திருமலை: ஆந்திர மாநில அரசு இளைஞர்களையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்காக ஆந்திர பிரதேச விளையாட்டு ஆணையம் சார்பில், மாநிலம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற விளையாட்டு திருவிழாவை நடத்துகிறது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ஆடுதாம் ஆந்திரா (விளையாடுவோம் ஆந்திரா) விளையாட்டு போட்டிகளை குண்டூர் மாவட்டம், நல்லபாடு லயோலா கல்லூரியில் ஜோதியை ஏற்றி வைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார். அருகில் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜாவை கிரிக்கெட் விளையாட ஊக்குவித்தார். கிரிக்கெட் விளையாடத் தயங்கிய ரோஜாவுக்கு பேட்டிங் கற்றுக்கொடுத்தார். அதில் கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது? எவ்வாறு ஆடுவது? என விளக்கம் அளித்து தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ‘ஆடுதாம் ஆந்திரா’ போட்டிகள் தொடக்க விழா ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Jaganmohan ,Roja ,8th Andhra Pradesh' ,Tirumala ,Andhra state government ,Andhra… ,Dinakaran ,
× RELATED லண்டன் பயணம் முடிந்து ஆந்திரா...