×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுவாமி தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து, கோயிலில் உள்ள சிற்பங்களையும் ரசித்து பார்த்து சென்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் தினந்தோறும் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அதிகளவில் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மேல்மருவத்தூர் கோயிலுக்கு வரும் செவ்வாடை பக்தர்கள் உள்ளிட்ட பக்தர்களும் பெரும்பாலும் சிதம்பரம் வந்திருந்து நடராஜரை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்று காலை ஒரு குழுவாக வந்திருந்தனர். தொடர்ந்து கீழ சன்னதி வழியாக கோயிலுக்குள் சென்று நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளை தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்குள்ள கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி உள்ளிட்ட இடங்களிலும் சாமியை வழிபட்டனர். அதனை அடுத்து ஆதிமூல நாதர் சன்னதி, முருகர் சன்னதி, சிவகங்கை தீர்த்தகுளம் அருகே உள்ள சிவகாமசுந்தரி அம்பாள் சன்னதி உள்ள இடங்களையும் பார்வையிட்டனர். மேலும் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்களையும் ரசித்துப் பார்த்தனர். அப்போது கோயில் வரலாறு உள்ளிட்ட சில தகவல்களை அங்கிருந்த பக்தர்களிடம் கேட்டு வியந்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Australia ,Swami ,Chidambaram Nataraja Temple ,Chidambaram ,Nataraja Temple ,Chidambaram, Cuddalore district ,
× RELATED சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற...