×

டிஎன்பிஎல் டி20 லீக்: பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக சேப்பாக் கில்லீஸ் தகுதி

சேலம்: டி.என்.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி சேலம் வாழப்பாடியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிஷேக் 47 ரன், ஹரி நிஷாந்த் 31 ரன், சன்னி சாந்து 30 ரன் எடுத்தனர். விஜய சங்கர் 2 ரன்னில் அவுட்டானார். சேப்பாக் அணி வீரர் பிரேம் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஆஷிக் 36 பந்தில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மோகித் ஹரிஹரன் 32 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சேப்பாக் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சேப்பாக் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய சேப்பாக் வீரர் பிரேம்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

The post டிஎன்பிஎல் டி20 லீக்: பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக சேப்பாக் கில்லீஸ் தகுதி appeared first on Dinakaran.

Tags : TNPL T20 League ,Chepauk ,Gillies ,Salem ,17th league ,TNPL ,Salem Vazhapadi ,Salem Spartans ,Chepauk Gillies ,Dinakaran ,
× RELATED 3வது டி20 போட்டியில் இன்று மிரட்டும்...