×

சென்னை துறைமுகத்தில் பார்க்கிங் கட்டணம் எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: 4500 லாரிகள் இயங்காது என அறிவிப்பு

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்தில் ரூ.100 பார்க்கிங் கட்டணம் எதிர்த்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை துறைமுகத்தில் மட்டும் 4500 லாரிகள் இயங்காது என அறி வித்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகளுக்கு பார்க்கிங் கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை கண்டித்து அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கத்தை சேர்ந்தவர் கன்டெய்னர்களை இயக்காமல் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சங்க தலைவர் கோபிநாத் கூறுகையில், ”சென்னை துறைமுகம் சமீபத்தில் அறிவித்த அறிவிப்பில் கடந்த 14.5.2025 அன்று அனைத்து கன்டெய்னர் லாரிகளுக்கும் பார்க்கிங் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை துறைமுகத்தில் லாரிகள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போவதில்லை. இந்த 3 நாட்களூக்குள் கட்டணம் வசூலிப்பதை வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால் சென்னை துறைமுகம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றார்.

The post சென்னை துறைமுகத்தில் பார்க்கிங் கட்டணம் எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: 4500 லாரிகள் இயங்காது என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai port ,Thandaiarpet ,Chennai port… ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்