×

பைக் மீது கார் மோதி சென்னை வாலிபர்கள் பரிதாப பலி

செஞ்சி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை சேர்ந்த நண்பர்கள் பாஸ்கர் (33), பிரகாஷ் (33). சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். உடன் வேலை செய்யும் நண்பருக்கு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தில் திருமணம் நடந்தது. இதற்காக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பைக்கில் இருவரும் சென்றுள்ளனர். செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் பெருங்கப்பூர் காப்புக்காடு அருகே நள்ளிரவில் சென்றபோது திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி சென்ற கார், பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர். கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி காட்டுப் பகுதிக்குள் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 2 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கபபட்டனர்.

The post பைக் மீது கார் மோதி சென்னை வாலிபர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Senchi ,Bhaskar ,Prakash ,Willianur, Puducherry ,
× RELATED ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட...