எண்ணூர்: சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உடல்நல பாதிப்பு வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியார் உர தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையை பொறுத்தவரை அமோனியாவை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் திரவ அமோனியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் அமோனியம் கொண்டுவரப்படும் குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று எவ்வித அமோனியம் கொண்டு வரப்படாத சூழலிலும் குழாயில் தேங்கியிருந்த அமோனியம் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக அமோனியம் வெளியேறியது.
இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு திடீரென மூச்சுத்திணறல், மாயாக்கள் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்பட்டது. அமோனியம் கசிவால் பாதிப்பிற்குள்ளாகிய மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரியகுப்பம் பகுதியின் அருகில் உள்ள கிராம மக்களும் அச்சத்தின் காரணமாக ஆட்டோ, பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் வெளியேறினர்.
The post சென்னை எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அமோனியம் கசிவு: 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.