×

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: இபிஎஸ் கண்டனம்

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்டமோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிய நபரை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது . தமிழ்நாட்டைல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

The post சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: இபிஎஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Velachery, Chennai ,EPS ,Chennai ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி