×

சென்னையில் இன்று 8 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, மும்பை, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புறப்பாடு 4, வருகை 4 என மொத்தம் 8 விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். இரவு 7.10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு, மும்பைக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. காலை 9.45 மணிக்கு டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து பகல் 1.45 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து

இரவு 8.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து காலை 9.05 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து. ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானங்கள் ரத்துக்கு இதுவரை முறையாக காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

The post சென்னையில் இன்று 8 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Delhi ,Mumbai ,Thoothukudi ,Chennai airport ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...