×

சென்னை இரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போனை கைப்பற்றியது காவல்துறை

சென்னை: சென்னை இரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று 21/06/23 தேதி 12.51 மணிக்கு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மாநில காவல் கட்டுப்பாட்டு (100 Calls) அறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் செல்போன் எண்ணானது கடந்த 25/04/23 தேதி சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த நபரான மணிகண்டன்(21) த.பெ.ராம லிங்கம்எண்.B-42,மல்லிகைப்பூ காலனி, வியாசர்பாடி சென்னை என்பவர் என்று தெரியவந்துள்ளது.

மேற்படி மணிகண்டன் மனநிலை பாதிக்கப்பட்டவர் தந்தை ராமலிங்கம் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டனுக்கு உதவியாக இருந்த நிலையில் அவரது செல்போனை எடுத்து காவல் கட்டுப்பாட்டுறைக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இவர் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கபட்ட நபர் என்பதால் நடவடிக்கை எடுக்கமல் போலிசார் விட்டனர். மீண்டும் அதே நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், அதற்கு பயன்படுத்தப்பட்ட செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post சென்னை இரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போனை கைப்பற்றியது காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai railway station ,Chennai ,
× RELATED சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42...