×

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: அக்டோபரில் தொடக்கம்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி கடந்த 2022ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு இந்த போட்டியை நடத்தும் உரிமம் சென்னைக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துக்கு சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் வழங்கி உள்ளது. இதன்படி இந்த போட்டி அக்டோபர் 27ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

இதில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘‘எங்களது தீவிர முயற்சியின் பலனாக மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னைக்கு திரும்பி இருக்கிறது.இதற்கு பக்கபலமாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் நன்றி.’’ என்று அவர் கூறினார்.

The post சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: அக்டோபரில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai Open Women's Tennis ,Chennai ,Chennai Open Women's International Tennis Tournament ,Chennai Open International Women's Tennis ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!